தொழிலாளர் சட்டத்தில் மிகப்பெரிய சீர்திருத்தம்.. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அங்கீகாரம்..!
நாட்டின் அடுத்த 25 ஆண்டுகால முன்னேற்றப்பயணத்தில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் தேசிய தொழிலாளர் மாநாடு திருப்பதியில் நடைபெறுகிறது.
புதுடெல்லியில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக மாநாட்டில் பங்கேற்றுப் பேசினார். கடந்த 8 ஆண்டுகளில் தேவையற்ற பல சட்டங்களை நீக்கி தொழிலாளர் சட்டங்களில் மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
அடுத்த 25 ஆண்டுகால அமிர்த காலத்தில், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதில் தொழிலாளர் சமூகத்தின் பங்கு மிக முக்கியமானது என்றும் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொழிலாளர் சமூகத்தின் ஆற்றலுக்கு கூடுதல் பலம் சேர்த்து வருவதாகவும் பிரதமர் கூறினார்.
Comments