அதிமுக அலுவலக கலவர வழக்கு - ஓபிஎஸ் முதல் எதிரி

0 4644

அதிமுக அலுவலக கலவரம் மற்றும் ஆவணங்கள் திருட்டு தொடர்பாக சி.வி.சண்முகம் அளித்த புகாரின் அடிப்படையில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் கதவை காலால் எட்டி உதையுங்கள் என்று சொல்ல அவருடன் வந்தவர்கள் எட்டி உதைத்தும் கடப்பாறையால் தாக்கியும் கதவை திறந்து அதிமுக அலுவலகத்திற்கு அத்துமீறி சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் எதிரியாக ஓபிஎஸ் பெயரும், 2-வது எதிரியாக வைத்திலிங்கமும், 3-வது எதிரியாக மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொலை மிரட்டல், கலகம் செய்தல், பொது சொத்தை சேதப்படுத்துதல், நம்பிக்கை மோசடி, சொத்துக்களை திருடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments