7 ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியார் மீது பாய்ந்த போக்சோ சட்டம்.!
7 ஆம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த கணக்கு வாத்தியார் மீது போக்சோ சட்டம் பாய்ந்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடிவருகின்றனர். கன்னியாக்குமரி மாவட்டம் திருப்பதிசாரத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 45 வயதான ஆம்ஸ் நல்லதம்பி கணித ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் அப்பள்ளியில் படிக்கும் 7 வகுப்பு மாணவியிடம் வகுப்பறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி ஆசிரியையிடம் தெரிவிக்கவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும், ஆசிரியர் ஆம்ஸ் நல்லத்தம்பி தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
Comments