பணம் - நகைக் கேட்டு கடத்தப்பட்ட அரசியல் பைனான்ஸியர் கொலை..! கொ.ம.தே.க- வினர் போராட்டம்..!
நாமக்கல்லை சேர்ந்த கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகி பணத்துக்காக கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் வெப்படை பாதரை பகுதியை சேர்ந்தவர் கெளதம்., கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் ஒன்றிய இளைஞர் அணி செயலாளரான இவர், வெப்படை பகுதியில் கடந்த 6 வருடங்களாக தனியார் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி நிதி நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வழி மறித்து மர்ம கும்பல் காரில் கெளதமை இரு சக்கர வாகனத்துடன் கடத்தி சென்றுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி. சாய் சரண் தேஜஸ்வி யின் உத்தரவின்பேரில் 6 தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்க்கிடையே அவரது மனைவியை தொடர்பு கொண்ட கவுதம் , ஒரு நபரின் பெயரை சொல்லி அவரிடம் நகை பணத்தை கொடுத்து அனுப்ப சொன்னதாக கூறப்படுகின்றது.
கடத்தல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் போலீசாருக்கு கிடைத்தது. தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்திய நிலையில் நேற்று இரவு சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே வைகுந்தம் ஏரிக்கரையில் கெளதம் சடலமாக கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்ட நிலையில் கெளதம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து குற்றவாளியை கண்டுப்பிடிக்ககோரியும், தொடர்ந்து டிஎஸ்பியிடம் குற்றவாளி கண்டுபிடிப்பது தொடர்பான விசாரணை குறித்தும் போலீசாரிடம் கேட்டனர்.
இதன் பின்னர் போலீசார் பதில் நம்பிக்கை அளிக்காததால் உறவினர்கள் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் வெப்படை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என்றும் கொலை செய்யப்பட்ட சம்பவம் 24மணி நேரத்திற்கு முன்பு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தும் இதுவரை கைது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் தொடர்ந்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் வரை கொலை செய்யப்பட்ட கெளதம் உடலை வாங்க மாட்டோம் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையெனில் சிபிசிஐடி மற்றும் சிபிஐ விசாரணை கோரி நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க இருப்பதாக கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வெப்படையில் 300க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Comments