உக்ரைனுக்கு மேலும் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி - ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..!
உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மேலும் 7.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை ஒதுக்க திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கிய கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து இதுவரை 9.4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதி உதவி உக்ரைனுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ராணுவம், பட்ஜெட், மனிதாபிமான உதவிகள், சுகாதாரம் பராமரிப்பு, அவசர உதவி தொகுப்புகள் என நிதி பிரித்து ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments