கைவிசை தண்ணீர் பம்பை சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை.. தண்ணீர் பெற முடியாமல் மக்கள் பரிதவிப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பயன்பாட்டில் இருந்த கைவிசை தண்ணீர் பம்பை சேர்த்து சாலை போடப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருப்பதோடு, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புளியம்பட்டி ஊராட்சியில் முல்லை நகர் சின்ன திருப்பதி கோவில் முதல் குருசாமி கொட்டாய் வரை 6 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக சிமெண்ட் சாலை போட்டப்பட்டது.
இதில், சாலையோரமாக இருந்த கைவிசை பம்பை சேர்த்து காங்கீரிட் சாலை போடப்பட்டதால், தண்ணீர் பெற முடியாமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர்.
மேலும், கை விசை பம்பை சாலை மட்டத்திலிருந்து உயர்த்தி அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments