பாலிவுட்டில் பரவி வரும் புறக்கணிப்பு கலாச்சாரம் குறித்து மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வேதனை!

0 12132

பாலிவுட்டில் பரவி வரும் புறக்கணிப்பு கலாச்சாரம் குறித்து மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கருத்துகள் கூறியதாக பிரச்சாரம் செய்யப்பட்டு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன.

அண்மையில் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டு வெளியான நடிகர் அமிர்கானின் லால்சிங் சட்டா திரைப்படமும் அக்சய் குமாரின் ரக்சா பந்தன் திரைப்படமும் புறக்கணிப்புகளுக்கு ஆளானது.

இதனால் அந்தப் படங்களின் வழக்கமான வசூல் பாதிக்கப்பட்டது. இது குறித்து தமது சமூக ஊடக தளத்தில் கருத்து தெரிவித்துள்ள அமிதாப் பச்சன், இதைப் பற்றி ஏதாவது பேச நினைத்தாலும், எதைப் பேசினாலும் சர்ச்சை ஆகிவிடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments