இரண்டு நாள் தொழிலாளர் அமைச்சர் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு!

0 3464

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தொழில்துறை அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாகக் கலந்துரையாடுகிறார். 

தொழிலாளர் பிரச்சினைகள், தொழிலாளர் நலன்கள் குறித்து பல்வேறு மாநில தொழில்துறை அமைச்சர்களுடன் நடத்தும் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக பங்கேற்று கலந்துரையாடுகிறார்.

மத்திய தொழில்துறை அமைச்சகத்தின் இரண்டு நாள் மாநாடு இன்று திருப்பதியில் தொடங்குகிறது. தொழிலாளர் நல கொள்கைகள், சட்டங்கள் குறித்து மாநிலங்களுடன மத்திய அரசு இணைந்து செயல்படுவதற்கு இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

மாநில அரசுகளால் நடத்தப்படும் தொழிலாளர்களுக்கான இஎஸ்ஐ மருத்துவமனை சேவைகளை மேம்படுத்துவது, அமைப்பு சாராத தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு, பணி நேரம், தொழிலாளர்களிடையே பாலின பேதத்தை நீக்குதல், அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எதிர்கால பாதுகாப்பு வழங்குதல் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படுகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments