மகளின் திருமண வாழ்க்கை கசந்ததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தொழிலதிபர் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை!

0 13488

சென்னை விருகம்பாக்கத்தில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் மகளின் திருமண வாழ்க்கை கசந்ததாலும் ஏற்பட்ட மன உளைச்சலில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் கடிதம் எழுதி வைத்துவிட்டு அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

டெல்லி காவல் ஆணையராக பணிபுரியும் தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சய் அரோராவுக்கு சொந்தமாக விருகம்பாக்கத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.

அந்த குடியிருப்பில், தூத்துக்குடியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த மதுசுதன ரெட்டி என்பவர், 4 ஆண்டுகளாக குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார்.

நேற்று மதுசுதன ரெட்டி 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், அவர் எழுதியதாக கூறப்படும் 8 பக்க அளவிலான கடிதத்தை அவரது வீட்டிலிருந்து போலீசார் கைப்பற்றினர்.

அதில், தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாலும் மகள் கணவரை பிரிந்து தங்களுடன் வசித்து வருவதாலும் ஏற்பட்ட மன உளைச்சலில் தான் தற்கொலை செய்துக் கொள்வதாக அவர் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments