தமிழகத்தின் 4 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை எச்சரிக்கை!
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாளையும் நாளை மறுநாளும் டெல்டா மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ள வானிலை மையம், 27 மற்றும் 28ம் தேதிகளில் 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
Comments