கணியாமூர் மாணவி மரண வழக்கில் பள்ளித் தாளாளர், ஆசிரியர்கள் எதற்காகக் கைது? - நீதிபதி வினா

0 4356

கணியாமூர் மாணவி மரண வழக்கில் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் ஆகியோர் எதற்காகக் கைது செய்யப்பட்டனர் என்பதற்குக் காரணம் தெரிவிக்காவிட்டால், விசாரணை அதிகாரிகள் ஆஜாரக உத்தரவிட நேரிடும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் சந்தேக மரணம் என வழக்குப்பதிந்த சின்னசேலம் காவல்துறையினர் பள்ளித் தாளாளர், செயலர், முதல்வர், ஆசிரியர்கள் என 5 பேரைக் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.

5 பேரின் ஜாமீன் மனுக்களை விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, ஆசிரியர்கள் தரப்பில் மாணவி மரணத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

மாணவியின் பெற்றோர் தரப்பில், தங்கள் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றிருக்கலாம் என சந்தேகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் காவல்துறை நிலைப்பாடு என்ன என நீதிபதி வினவியதற்கு விளக்கம் பெற்றுத் தெரிவிக்க அவகாசம் வேண்டுமென அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments