சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு கத்திக்குத்து
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பெண் காவலரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
நேற்றிரவு 9 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கிச் செல்ல புறநகர் ரயில் தயாராக இருந்துள்ளது.
அதில், பெண்கள் கோச்சில் ரயில்வே பெண் காவலரான ஆசிர்வா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், ஒரு நபர் பெண்கள் கோச்சில் ஏற முயன்றுள்ளார்.
பெண்கள் கோச்சில் ஏறக்கூடாது என பெண் காவலர் கூறியதால் ஆத்திரமடைந்த அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண் காவலரின் கழுத்து, மார்பு பகுதிகளில் குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த பெண் காவலர் பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
Comments