பூமிக்கு அடியில் ஆயில் சம்ப்... கலப்பட எண்ணெய் கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்..! சில்லரையாக விற்றால் சீல் தான்..!

0 11838

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் கடைக்குள் பூமிக்கடியில் ஆயில் சம்ப் அமைத்து பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணையை கலப்படம் செய்து விற்றுவந்த வியாபாரியின் தில்லுமுல்லை கண்டுபிடித்த உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் கலப்பட எண்ணை விற்பனையகத்தை இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.

சென்னை மேற்கு மாம்பலத்தில் இயங்கி வந்த ஸ்ரீமாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் எனற கடையில் தரமற்ற உணவு பொருட்களும், சமையல் எண்ணையும் விற்கப்படுவதாக உணவுப்பாதுகப்புத்துறையின் வாட்ஸ் அப் எண்ணுக்கு புகார்கள் சென்றது. அதன் பேரில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதிஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் அந்த கடைக்குள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த கடைக்குள் பூமிக்கு அடியில் 4 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ராட்சத சம்ப் அமைத்து அதில் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணை ஆகியவற்றை கலப்படம் செய்து விற்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து அந்த கடையில் இருந்த கலப்பட எண்ணையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முறையான உரிமம் பெறாமல் ஆயில் கிடங்கு வைத்திறந்த குற்றத்திற்காகவும், சில்லறை விற்பனைக்கு உரிய அங்கீகாரம் பெறாமல் இருந்த குற்றத்திற்காகவும், அந்த கடை செயல் பட தடை விதித்த அதிகாரிகள் கடையை தற்காலிகமாக இழுத்து பூட்டி சீல் வைத்தனர்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ் குமார் , 2020 ஆம் ஆண்டு உணவுப்பொருள் பாதுகாப்புச் சட்டப்படி எண்ணைய் வகைகளை சில்லரையில் விற்பனை செய்யக்கூடாது என்றும் இங்கு 100 சதவீதம் சுத்தமில்லாத எண்ணைய் சில்லறையாக விற்கப்பட்டு வந்ததை கண்டுபிடித்துள்ளதாக தெரிவித்தார்.

1500 லிட்டர் சூரிய காந்தி எண்ணையும், 3 ஆயிரம் லிட்டர் பாம் ஆயிலும் இந்த கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறிய சதீஷ்குமார், மொத்தம் 4400 லிட்டர் கலப்பட எண்ணெய்யை கைப்பற்றி உள்ளதாகவும், உணவு பொருளும் உணவகமும் தரமற்ற முறையில் இருந்தால் 94440 42322 என்ற எண்ணில் புகார் அளிக்க வேண்டுகோள் விடுத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments