ஜூனியர் குப்பண்ணா பிரியாணி கெட்டுப் போனா ரொம்ப தப்புண்ணா..! பதிலுக்கு பதில் புகார்

0 16809

சென்னை நூங்கம்பாக்கம் ஜூனியர் குப்பன்னா ஓட்டலில் கெட்டுபோன பிரியாணி பரிமாறப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் , வாங்கிய உணவுகளை முழுவதையும் சாப்பிட்டு விட்டு , மிச்சம் மீதியை காண்பித்து தங்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் கேட்டு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உரிமையாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஜூனியர் குப்பன்னா உணவகத்திற்கு கார்த்தி என்பவர் மனைவி மற்றும் 2 வயது குழந்தையுடன் உணவருந்த சென்றார். பிரியாணி , ஆட்டுக்கால் சூப், இட்லி, கலக்கி உள்ளிட்டவற்றை ஆர்டர் செய்து சாப்பிட்டதாக கூறப்படுகின்றது. இதில் அவருக்கு பறிமாறப்பட்ட பிரியாணி கெட்டுபோனதாக கூறி கார்த்தி ஓட்டல் ஊழியர்களிடம் கூறி உள்ளார். அவர்கள் சாப்பிட்டு பார்த்து விட்டு நன்றாக இருப்பதாக கூறியதால் கூட்டாளிகளை வரவழைத்து பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் ஓட்டலில் உள்ள பொருட்களை தட்டிவிட்டு ஓட்டல் ஊழியர்களை அடித்து காலால் எட்டி உதைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஓட்டலில் கெட்டுபோன பிரியாணி கொடுத்ததாக நுங்கம் பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் மூலம் உணவு பாதுகாப்புத்துறையினரிடம் புகார் அளித்தின் அதிகாரிகள் வராததால், நேரில் புகார் அளிக்கபோவதாகவும் கூறிச்சென்றார் கார்த்திக்.

இந்த நிலையில் ஜூனியர் குப்ண்ணா ஓட்டல் உரிமையாளர் வெளியிட்டுள்ள தன்னிலை விளக்க வீடியோவில் , தங்களிடம் ஒன்றரை லட்சம் ரூபாய் கேட்டு அவர்கள் பஞ்சாயத்து செய்ததாகவும், தாங்கள் பணம் கொடுக்க மறுத்ததால் ஊழியர்களை தாக்கியதாகவும், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளுடன்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்தார்.

பிரியாணி கெட்டுபோனதாக வாடிக்கையாளர் புகார் தெரிவித்து நீண்ட நேரமாகியும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு மேற்கொள்ளாததால் அந்த பிரியாணி கெட்டுபோனதா ? இல்லையா ? என்பதை கண்டறிய இயலவில்லை என்றும் உணவு பொருள் சரியில்லை என்றால் ஊழியர்களை தாக்குவது தவறான நடைமுறை என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments