டிஆர்டிஒ - இந்திய கடற்படை இணைந்து நடத்திய ஏவுகணை சோதனை வெற்றி
தரையில் இருந்து வானில் குறுகிய தூரம் உள்ள இலக்கினை செங்குத்தாக பாய்ந்து சென்று தாக்கி அழிக்கும் நவீன ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளது.
டிஆர்டிஒ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட குறுகிய தூரம் உள்ள இலக்கினை தாக்கி அழிக்கும் ஏவுகணையின் சோதனை ஒடிசா மாநிலத்தின் சண்டிப்பூர் கடற்கரை பகுதியில் நடத்தப்பட்டது.
டிஆர்டிஒ மற்றும் இந்திய கடற்படை இணைந்து இந்த சோதனையை நடத்தியது. தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை செங்குத்தாக சென்று தாக்கி அழிக்கும் ஏவுகணை கடற்படை போர் கப்பலில் இருந்து ஏவப்பட்டது.
ரேடியோ அதிர்வெண் கண்டறியும் கருவி பொருத்தப்பட்ட அந்த ஏவுகணை, செங்குத்தாக பாய்ந்து சென்று அதிவேகமாக நகர்ந்து கொண்டிருந்த வான் இலக்கை இடைமறித்து துல்லியமாக தாக்கி அழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3.8 மீட்டர் நீளமும் 154 கிலோ எடையும் கொண்ட இந்த ஏவுகணை 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலான வான் இலக்குகளை நிர்மூலமாக்கும் திறன்பெற்றது. இதன் மூலம் இந்திய கடற்படையின் பாதுகாப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments