சட்டவிரோதமாக கட்டப்பட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட இரட்டைக் கோபுரங்கள் வரும் 28ஆம் தேதி இடிப்பு.!
உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட இரட்டைக் கோபுரங்கள் வரும் 28ஆம் தேதி தகர்க்கப்பட உள்ள நிலையில், அந்த கட்டடங்களில் 3,700 கிலோ வெடிபொருட்களை நிரப்பும் பணி நிறைவடைந்துள்ளன.
40 தளங்களை கொண்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் 15 விநாடிகளுக்குள் இடிந்து விழும் என்றும் கட்டிடங்களில் இருந்து கிடைக்கும் 4,000 டன் இரும்புத் தகடுகள் உள்பட 55 ஆயிரம் டன் கழிவுகள் ஆயிரத்து 300 லாரிகள் மூலம் அகற்றப்படும் என்றும் தொழில்நுட்ப வல்லூநர் குழு கூறியுள்ளது.
குறிப்பாக, நாள் ஒன்றுக்கு மூவாயிரம் டன் கழிவுகள் அகற்றப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
Comments