எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணை ஒத்திவைப்பு.!
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதிக்கட்ட விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வருகிற வியாழக்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலிடப்பட்ட இபிஎஸ்-ன் மேல்முறையீட்டு மனுக்கள், இன்று நீதிபதிகள் துரைசாமி,சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மேல் முறையீட்டு வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காமல், நேரடியாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஒருவர் ஆஜராக இருப்பதால், இறுதி விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்குமாறும் ஓபிஎஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இபிஎஸ் தரப்பிலும் வியாழக்கிழமை அன்று மேல்முறையீட்டு வழக்கில் வாதங்களை முன் வைக்க தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால், மேல்முறையீட்டு வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணையை வருகிற வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Comments