விக்ராந்த் விமானந்தாங்கி போர்க் கப்பலை செப்.2-ந் தேதி நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

0 3674
விக்ராந்த் விமானந்தாங்கி போர்க் கப்பலை செப்.2-ந் தேதி நாட்டுக்கு அர்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி..!

உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் விமானந்தாங்கி போர்க் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 2-ந்தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். 

விமானம் தாங்கி போர்க்கப்பல்களை உள்நாட்டிலேயே கட்டுவதற்கான திட்டத்தை 2007ம் ஆண்டு மத்திய அரசு செயல்படுத்தியது. அதன்படி முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை கட்டும் பணியை கொச்சி கப்பல் கட்டுமான நிறுவனம் தொடங்கியது.

20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கப்பலின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பின், நான்காவது மற்றும் இறுதிக்கட்ட வெள்ளோட்ட பரிசோதனை ஒரு மாதத்திற்கு முன்பு நிறைவடைந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 28-ந்தேதி கடற்படையிடம் போர்க் கப்பல் ஒப்படைக்கப்பட்டது.

மிக்-29 கே ஜெட்கள், காமோவ்-31 ஹெலிகாப்டர்கள், எம்.ஹெச்.-60 ஆர் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இக் கப்பலில் இணைக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளன. கொச்சி நகரையே ஒளிமயமாக்கக்கூடிய அளவுக்கு எட்டு மின்சார ஜெனரேட்டர்கள் இதில் இயக்கப்படுகின்றன. மருத்துவமனை போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் இதில் உள்ளன.

வரும் 2-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி, இந்த கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்புத் துறை அதிகாரிகள், கப்பல் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள், முதல் விமானம் தாங்கிப் போர்க் கப்பலில் பணியாற்றிய அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

விக்ராந்த் விமானந்தாங்கிக் கப்பல் இந்தியப் பெருங்கடல் பாதுகாப்புக்கு முக்கியம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ‘விக்ராந்த்’ கப்பலை இயக்குவதன் மூலம், விமானம் தாங்கி கப்பலை உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்குவதற்கான முக்கிய திறன் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments