வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட 4 பேர் கைது.. சிலிண்டர், வெல்டிங் மெஷின், ஏணி, கேபிள் ஒயர் ஆகியவை பறிமுதல்..!

0 2954
வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட 4 பேர் கைது.. சிலிண்டர், வெல்டிங் மெஷின், ஏணி, கேபிள் ஒயர் ஆகியவை பறிமுதல்..!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட 4பேர் கைதாகினர்.

பாம்பாறு அணை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி ஊத்தங்கரை போலிசார் சோதனை செய்தனர்.

அப்போது காரில் சிலிண்டர், வெல்டிங் மிஷின், ஏணி,கேபிள் ஓயர் மற்றும் இரும்பு ராடு ஆகியவை இருந்ததை கண்டு விசாரணை நடத்திய போது அவர்கள் நால்வரும் ஊத்தங்கரை சுற்றுவட்டார பகுதியில் இருக்கக்கூடிய வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியது அம்பலமானது.

பெண் உள்பட 4பேர் கொண்ட இந்த கும்பல் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் வங்கியில் கொள்ளை அடிப்பதற்காக காரில் ஊத்தங்கரை வந்திருப்பதும் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments