காவல் நிலைய இரும்பு கதவுகளை உடைத்து தப்பிய கார் வில்லன்..! பரபரப்பு வீடியோ வெளியானது..!
திருச்சூர் அருகே காவல் நிலையத்திற்குள் மண் வெட்டியுடன் புகுந்த ஆசாமி காவல் நிலைய இரும்பு கதவுகளை உடைத்து வீசி, பறிமுதல் செய்யப்பட்ட தனது காரை ஓட்டிச்சென்ற பரபரப்பு சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கூனமூச்சி பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த வில்சன் என்பவர், அவ்வழியாக சென்ற ஒருவர் மீது மோதும் வகையில் காரை ஓட்டியதாக கூறப்படுகின்றது. இதனால் பதறிப் போன அந்த நபர் கண்டனசேரி காவல் நிலையத்தில் வில்சன் மீது புகார் அளித்தார்.
புகார் தொடர்பான விசாரணைக்காக வில்சனை வரவழைத்த போலீசார் அவரது காரை பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்திற்குள் நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த வில்சன், போலீசார் முன்னிலையில் மூடப்பட்டிருந்த காவல் நிலைய வளாக கேட்டை மண்வெட்டியால் உடைத்து எறிந்தார்
தடுக்க முயன்ற போலீசாரை மண்வெட்டியால் தாக்க முயன்றதோடு, எட்டி உதைக்க முயன்றால் அவரது காலை பிடித்து போலீசார் இழுத்துப் போட்டனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட மண்வெட்டியான் எழுந்து போலீசார் மீது காரை ஏற்றுவது போல அச்சுறுத்தி மிரட்டியதோடு, தனது காரையும் அங்கிருந்து ஓட்டிச்சென்றார்.
காருக்குள் நாய் ஒன்று இருந்ததால் போலீசார் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று கூறப்பட்ட நிலையில் , விசாரணைக்கு வந்த வில்சன், வில்லனாக மாறி காவல் நிலைய வளாகத்தில் செய்த அட்டகாசத்தை காவலர் சிலர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர் இந்தநிலையில் காவல் நிலையத்தில் வில்லங்கம் செய்த வில்சனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்
Comments