சமந்தாவுக்காக பல கோடிகளை கொட்டியவர் ஒரு கோடிக்காக மோசடி வழக்கில் கைதாகும் நிலை..! ஆனந்தம் இல்லா லிங்குசாமி அப்பீல்..!

0 10537
சமந்தாவுக்காக பல கோடிகளை கொட்டியவர் ஒரு கோடிக்காக மோசடி வழக்கில் கைதாகும் நிலை..! ஆனந்தம் இல்லா லிங்குசாமி அப்பீல்..!

செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இயக்குனர் லிங்குசாமி, தனக்கு எதிரான தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய இருப்பதாக தெரிவித்ததால் அவர் மீதான கைது  நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல கோடிகளை முதலீடு செய்து சகோதரர்களுடன் கரம் கோர்த்து வலம் வந்தவர் ஒரு கோடிக்காக தண்டனை பெற்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு...

தனது சொந்தக் குடும்பக் கதையையே ஆனந்தம் என்ற பெயரில் படமாக்கி தமிழ்த் திரை உலகில் அறிமுகமானவர் இயக்குனர் லிங்குசாமி..! தாதா தங்கச்சியுடன் "ரன்" எடுத்து வின்னரான லிங்குசாமியை சண்டக்கோழி முன்னணி இயக்குனராக்கியது.

அதன் தொடர்ச்சியாக திருப்பதி பிரதர்ஸ் என்று சகோதரர்களுடன் கரம் கோர்த்து படத்தயாரிப்பு கம்பெனி தொடங்கி பல்வேறு நிதி நிறுவனங்களிடம் பணம் பெற்று புதிய படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்த லிங்குசாமி, அவரது தயாரிப்பில் வந்த அஞ்சான்மற்றும் உத்தம வில்லன் படங்களின் தோல்வி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார்.

22 வருடங்களில் 10 படங்கள் மட்டுமே இயக்கி உள்ள லிங்குசாமியின் இயக்கத்தில் அண்மையில் வெளியான வாரியர் படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு கார்த்தி - சமந்தாவை வைத்து ‘எண்ணி 7 நாள்’ என்ற பெயரில் புதிய படத்தை தயாரித்து இயக்க போவதாக கூறி பி.வி.பி கேபிடல் நிறுவனத்தில் 1 கோடியே 3 லட்சம் வாங்கிய கடனுக்காக லிங்குசாமி வழங்கிய காசோலைகள் வங்கியில் பணமின்றி திரும்பியது.

இதையடுத்து பி.வி.பி கேபிடல் நிறுவனத்தினர் லிங்குசாமி அவரது சகோதரர் சுபாஸ் சந்திர போஸ் ஆகியோருக்கு எதிராக செக் மோசடி வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை குற்றவாளி என்று திங்கட்கிழமை தீர்ப்பளித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் அவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க லிங்குசாமி தரப்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செல்வதாக கூறப்பட்டதால் அஞ்சான் லிங்குசாமிக்கு எதிரான கைது நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அஞ்சான் படத்தில் இடம்பெறாத ஒரு பாடல்காட்சிக்காக, தனி கப்பலை வாடகைக்கு பிடித்து சமந்தாவுக்காக பல கோடிகளை அள்ளிக் கொட்டி, தனித்தீவில் படப்பிடிப்பு நடத்திய பெருமைக்குரிய லிங்கு சாமி தற்போது ஒரு கோடி ரூபாய்க்காக ஜெயில்தண்டனை கிடைக்கும் நிலைக்கு வந்திருப்பது அவரது குடும்பத்தினரை வேதனைக்குள்ளாக்கி உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments