ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்..! ரகசியத்தை உடைத்த மாணவிகள்..! 2 மணி நேரம் சொன்னது என்ன?

0 164294
ஸ்ரீமதி உயிரிழப்புக்கு இது தான் காரணம்..! ரகசியத்தை உடைத்த மாணவிகள்..! 2 மணி நேரம் சொன்னது என்ன?

கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பிணகூறாய்வு அறிக்கையை ஆராய்ந்து ஜிப்மர் மருத்துவர்களின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீமதியின் தோழிகள் இருவர் விழுப்புரம் நீதிமன்ற நீதிபதி முன்பு ரகசிய சாட்சியம் அளித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் இரண்டு பிணக்கூறாய்வு முடிவுகளையும் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தடயவியல் மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், இந்த குழுவினர் மாணவியின் பிரேத பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து ஒரு மாதத்திற்குள் தங்கள் ஆய்வறிக்கையை, மூடி முத்திரையிட்ட உறையில் விழுப்புரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இருந்தது.

இந்நிலையில், மாணவி ஸ்ரீமதியின் உடலை முதலில் பிரேதப் பரிசோதனை செய்த முடிவு, மற்றும் மறுபிரேதப் பரிசோதனை செய்த முடிவு ஆகியவற்றை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் மூலமாக கடந்த ஒன்றாம் தேதியன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழுவிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, ஜிப்மர் மருத்துவக் குழுவினர், மாணவி ஸ்ரீமதியின் பிரேதப் பரிசோதனை முடிவுகளை முழுமையாக ஆய்வு செய்த நிலையில், அந்த ஆய்வு முடிந்ததும், அதனை அறிக்கையாக தயார் செய்தது. இந்த ஆய்வறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து, அதனை திங்கட்கிழமை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் தாக்கல் செய்தனர்.

இதற்கிடையே தீவிர விசாரணை நடத்திவரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், மாணவியின் உறவினர்கள், மாணவியின் சொந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர் படித்த பள்ளி நிர்வாகத்தினர், மாணவிக்கு வகுப்பு எடுத்த ஆசிரியர்- ஆசிரியைகள், உடன் படித்த மாணவ மாணவிகள், தோழிகள், ஊழியர்கள் என பலரிடமும் தீவிர விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து உள்ளனர்

இந்நிலையில் மாணவி ஸ்ரீமதியுடன் அதே பள்ளியில் தங்கிப்படித்த அவரது 2 தோழிகள் காவல் துறையினரிடம் விரிவாக தெரிவித்துள்ளனர். அவர்கள் அளிக்கும் வாக்குமூலம் இவ்வழக்கின் முக்கிய சாட்சியமாக கருதப்படுவதால் மாணவியின் தோழிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்து, அதற்கான ஒப்புதலை நீதிமன்றத்திடம் இருந்து பெற்றனர்

இதன் அடிப்படையில், திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் மாணவி ஸ்ரீமதியின் தோழிகள் 2 பேர், அவர்களது பெற்றோரின் அனுமதியுடன் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

பின்னர் நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி, சுமார் 2 மணி நேரம் ரகசிய சாட்சியம் அளித்தனர். நீதிபதி புஷ்பராணி, இரு மாணவிகளின் வாக்குமூலத்தையும் பதிவு செய்துகொண்டார்.

ஜிப்மர் மருத்துவ குழுவினரின் அறிக்கை மற்றும் 2 மாணவிகளின் வாக்குமூலம் இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகவும் , விடை தெரியா கேள்விகளுக்கு விடையாகவும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே, விழுப்புரம் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளித்த இரண்டு மாணவிகள் உண்மையிலேயே ஸ்ரீமதியின் தோழிகள் தானா என சந்தேகம் உள்ளதாக மாணவி ஸ்ரீமதி தாயார் தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments