கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த 2 மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த 2 மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், திங்கட்கிழமையன்று ஸ்ரீமதியின் தோழிகள் இருவர், விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி 2 மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர்.
மாணவியின் இரு பிரேதப் பரிசோதனைகள் குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு நீதிமன்றத்தில் ஆய்வறிக்கையை தாக்கல் செய்தது.
Comments