தனது பேச்சை தணிக்கை செய்வதற்காகவே யூ டியுப் -க்கு அரசு தடை - இம்ரான் கான் குற்றச்சாட்டு
தனது பேச்சை தணிக்கை செய்வதற்காகவே, யூ டியுப் சமூக ஊடகத்தை பாகிஸ்தான் அரசு தடை செய்துள்ளதாக, அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இம்ரான் கான் வரம்பு மீறி அரசு அமைப்புகளுக்கே மிரட்டல் விடுக்கிறார் என பாகிஸ்தான் அரசு அவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனிடையே, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இம்ரான் கான் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், அவரது முன் ஜாமீன் மனுவை விசாரித்த இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம், இம்ரான் கானை வரும் 25 ஆம் தேதி வரை கைது செய்யக்கூடாது என முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
Comments