தன்பாலின உறவில் ஆண்கள் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்தது சிங்கப்பூர் அரசு..!
சிங்கப்பூரில், தன்பாலின உறவில் ஆண்கள் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில், தன்பாலின உறவில் ஈடுபடும் ஆண்களுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் அமலில் இருந்துவந்தது.
இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆயிரக்கணக்கான சமூக ஆர்வலர்கள் ஆண்டுதோறும் பேரணி நடத்திவந்தனர். சிங்கப்பூர் தேசிய தினத்தன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தன்பாலின உறவில் ஆண்கள் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டத்தை ரத்து செய்வதாக பிரதமர் லீ சியன் லூங் அறிவித்தார்.
அதேசமயம் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணம் செய்துகொள்ள தடை நீடிக்கிறது.
Comments