வழக்கில் சந்தேகிக்கப்படும் நபரை மண்டியிட வைத்து அடித்து துன்புறுத்திய மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம்

0 2261

அமெரிக்காவின் ஆர்கன்சா மாகாணத்தில் வழக்கு ஒன்றில் சந்தேகிக்கப்படும் நபரை தரையில் படுக்க வைத்து அடித்து துன்புறுத்திய 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மல்பெரியில் உள்ள கடை ஊழியருக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரை மடக்கி பிடிக்க முற்பட்டபோது, போலீசாரைத் தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த நபரை அடித்து மண்டியிட வைத்த போலீசார், தங்களது முழங்காலை வைத்து எட்டி உதைத்தும், கைகளால் சரமாரியாக தாக்கியும் துன்புறுத்தினர்

இந்த வீடியோ இணையத்தில் பதிவேற்றப்பட்டு பகிரப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட 3 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக ஆர்கன்சா மாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments