பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் முன் ஜாமின் கேட்டு மனு.!
பாகிஸ்தானில், பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 20ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உதவியாளர் கைது விவகாரம் தொடர்பாக காவல் உயரதிகாரிகள், பெண் நீதிபதி உள்ளிட்டோரையும் மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அவர் மீது தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முன்ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
Comments