சுங்கச்சாவடி கட்டணம் செலுத்த கூறியதால், பெண் ஊழியரின் கன்னத்தில் அறைந்த கார் ஓட்டுநர்

0 11226

 

மத்திய பிரதேச மாநிலத்தில், சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்த கூறிய பெண் ஊழியரின் கன்னத்தில் அறைந்த கார் ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.

கச்னாரியா (Kachnariya) கிராமத்தில் அமைந்துள்ள அந்த சுங்கச்சாவடியை காரில் கடக்க முயன்ற ராஜ்குமார் குர்ஜர் என்பவர், தான் அந்தப்பகுதியில் வசிப்பதால் சுங்ககட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரியுள்ளார்.

அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் கட்டணம் செலுத்திவிட்டு செல்லுமாறு பெண் ஊழியர் கூறியுள்ளார்.

ஆத்திரமடைந்த ராஜ்குமார், காரில் இருந்து இறங்கி பெண் ஊழியரை ஆபாசமாகத்திட்டு விட்டு கண்ணத்தில் அறைந்தார். பதிலுக்கு பெண் ஊழியரும் தனது காலணியை கழற்றி அவரை சரமாரியாகத் தாக்கினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments