மேகத்தில் ரசாயனத்தை தூவி செயற்கை மழையை உருவாக்க சீனா திட்டம்
சீனாவில் பெரும்பாலான பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால், பயிர்களைக் காக்க செயற்கை மழையை உருவாக்கி மேக விதைப்பு முறையைக் கையாள சீன அரசு முடிவு செய்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் 45 டிகிரி செல்சியஸை வெப்பநிலை கடந்ததால், வீடுகளில் குளிர்சாதன இயந்திரங்களின் தேவை அதிகரித்து, மின்சாரத்தை சேமிப்பதற்காக தொழிற்சாலைகள் கடந்த வாரம் மூடப்பட்டன.
சீனாவின் ஆண்டு மொத்த உற்பத்தியில் இலையுதிர் கால அறுவடை 75 சதவீதம் பங்கு வகிப்பதால், எவ்வித சேதமும் ஏற்படாதவாறு அறுவடையை உறுதிப்படுத்த அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளைக் கையாண்டு வருகின்றனர்.
மேகத்தில் ரசாயனத்தை தூவி, செயற்கை மழையை உருவாக்கும் மேக விதைப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
Comments