கல்லூரி மாணவியை கட்டையால் அடித்து மண்டையை உடைத்த முன்னாள் காதலனுக்கு வலைவீச்சு

0 5849
கல்லூரி மாணவியை கட்டையால் அடித்து மண்டையை உடைத்த முன்னாள் காதலனுக்கு வலைவீச்சு

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய கல்லூரி மாணவியை கட்டையால் அடித்து மண்டையை உடைத்த முன்னாள் காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.

தனியார் கலைக்கல்லூரியில் பி.ஏ இறுதியாண்டு படித்துவரும் அந்த மாணவியும், அஜின் என்பவரும் பள்ளி பருவம் முதலே 6 ஆண்டுகளாக காதலித்ததும், பின் கருத்துவேறுபாடு காரணமாக அந்த மாணவி அஜினை விட்டு பிரிந்ததாகவும் கூறப்படுகிறது.

உறவினரின் பங்களாவில் தங்கியிருந்த அந்த பெண் ஆண் நண்பர்கள், கல்லூரி தோழிகளுடன் பிறந்த நாளை கொண்டாடியபோது, மரம் ஏறி வீட்டிற்குள் புகுந்த அஜின், மரக்கட்டையால் அங்கிருந்தவர்களை தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

மண்டை உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் அஜினை தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments