இந்தியாவின் உட்கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உருவாக்க வேண்டும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
இந்தியாவின் உட்கட்டமைப்பை உலகத் தரத்துக்கு உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
மும்பையில் கட்டுமானப் பொறியாளர்கள் மாநாட்டில் பேசிய அவர், 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் நெடுஞ்சாலை உட்கட்டமைப்பு வசதிகளை அமெரிக்காவின் தரத்துக்கு உருவாக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் இருந்து நல்ல தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, நடைமுறைகள் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.
நாடு முழுவதும் 2 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 26 பசுமை விரைவுச் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
Comments