அமெரிக்க அருங்காட்சியகத்தில் இடம்பிடித்தார் இந்திய பெண் விமானி ஜோயா அகர்வால்
வான் வழியாக வட துருவத்தை கடந்த முதல் இந்திய பெண் விமானியான ஜோயா அகர்வால், அமெரிக்க விமான அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளார்.
2021ஆம் ஆண்டில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரை சுமார் 16 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவிற்கு, முழுவதும் பெண் விமானிகளால் ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டது.
உலகின் மிக நீளமான விமானப் பாதையில் விமானத்தை இயக்கி சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள் சாதனையை படைத்தனர். இந்த சாதனையின் காரணமாக புகழ்பெற்ற எஸ்.எப்.ஓ. விமான அருங்காட்சியகத்தில் ஜோயா அகர்வால் இடம்பிடித்துள்ளார்.
Comments