திருமணமாகாத பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தையும், தாயாரும் உயிரிழப்பு

0 3026
திருமணமாகாத பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தையும், தாயாரும் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, திருமணமாகாத பெண்ணிற்கு வீட்டிலேயே பிரசவம் பார்த்ததில் பச்சிளம் குழந்தையும், தாயாரும் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய பிரியா என்ற அந்த திருமணமாகத பெண்ணிற்கு திடீரென வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. அவரை தனியார் மருத்துவமனை அழைத்து சென்றபோது பிரியா கர்ப்பமாக இருப்பதாகவும், உடனடியாக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பிரியாவின் தாயார் அவரை வீட்டிற்கு அழைத்து வந்து உறவினர்களுடன் சேர்ந்து பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகவும், 5 மணி நேரம் கழித்து பிரியாவும் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

குழந்தையின் உடலை வீட்டருகே குழி தோண்டி புதைத்துவிட்டு பிரியாவின் உடலை கூடலூர் அரசு மருத்துவமனை எடுத்து சென்றபோது இறப்பில் சந்தேகமடைந்த மருத்துவர்கள் போலீசாருக்கு தெரிவித்தன் பேரில் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments