கடன் செயலிகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு அனுப்பப்பட்ட 500 கோடி.. டெல்லி போலீஸார் கண்டுபிடிப்பு..!
கடன் செயலிகள் மூலம் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 500 கோடி ரூபாய் பணம் அனுப்பப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடன் செயலிகள் மூலம் அதிக வட்டிக்கு கடன் வழங்குவதாகவும், கடனை செலுத்திய பிறகும், மார்பிங் செய்யப்பட்ட நிர்வாண படங்களை பயன்படுத்தி பணம் பறிப்பதாகவும் நூற்றுக்கணக்கான புகார்கள் டெல்லி சிறப்புப் பிரிவு போலீசாருக்கு வந்துள்ளது.
அந்த புகார்களை ஆய்வு செய்தபோது 100-க்கும் மேற்பட்ட மொபைல் போன் ஆப்கள் மூலம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.
பயனாளர்களின் தொடர்புகள், தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள சர்வர்களில் பதிவேற்றப்பட்டுள்ளதுடன், ஹவாலா மற்றும் கிரிப்டோ-கரன்சிகள் மூலம் லக்னோவில் உள்ள கால்சென்டர் வழியாக சீனாவுக்கு பணம் அனுப்பப்பட்டதும் தெரியவந்தது.
இது தொடர்பாக 2 மாதத்தில் 22 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Comments