சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு விநாயக சதுர்த்தி விழாவை கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்
விநாயக சதுர்த்தி விழாவைச் சூற்றுச்சூழலைப் பாதிக்காதவாறு கொண்டாடும்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
களிமண்ணால் செய்த விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. சிலைகளை அலங்கரிக்க உலர்ந்த மலர்க் கூறுகள், வைக்கோல் போன்றவற்றையும், சிலைகளைப் பளபளப்பாக்குவதற்கு மரங்களின் இயற்கைப் பிசின்களையும் பயன்படுத்தலாம் எனக் குறிப்பிட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, மக்கக் கூடிய, நச்சுக் கலப்பற்ற இயற்கைச் சாயங்களை மட்டுமே சிலைகளுக்குப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
Comments