ஒண்டிவீரன் அஞ்சல் தலை.. வெளியிட்டார் தமிழக ஆளுநர்

0 3414
ஒண்டிவீரன் ஒரு சமுதாயத்துக்கான சொந்தக்காரர் அல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் இந்தியாவுக்கும் சொந்தக்காரர் என அவர் படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஒண்டிவீரன் ஒரு சமுதாயத்துக்கான சொந்தக்காரர் அல்ல, ஒட்டுமொத்தச் சமூகத்துக்கும் இந்தியாவுக்கும் சொந்தக்காரர் என அவர் படம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்டுப் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 251ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டிப் பாளையங்கோட்டையில் அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்குத் தமிழக ஆளுநர் ரவி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை, மத்திய இணை அமைச்சர் முருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அஞ்சல் தலை வெளியீட்டு விழா பாளையங்கோட்டையில் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அஞ்சல் தலையை வெளியிடத் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பெற்றுக் கொண்டு வி.பி.துரைசாமி மற்றும் ஒண்டிவீரன் வாரிசு ஒண்டி ஆறுமுகத்திடம் வழங்கினார்.

 

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் முருகன், பிரதமரின் பெருமுயற்சியால் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனுக்கு அஞ்சல் தலை வெளியிட்டுப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

 

நிகழ்ச்சியில் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நெல்லையின் ஒவ்வொரு மண்ணிலும் வீரம் செறிந்திருப்பதாகத் தெரிவித்தார்.

 

விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, பிரிட்டிஷ் அரசு வரலாற்றை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் ஒண்டிவீரன், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் வரலாற்றை மக்கள் மனத்தில் இருந்து நீக்க முடியவில்லை என்றும், அவர்கள் நாட்டுப்புறக் கலைகள் வழியே மக்கள் மனத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments