ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு.. 200 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை தாக்கல்
சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 11 நகரங்களில் 10 ஆயிரத்து 651 கோடி மதிப்பீட்டில், 644 ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது, சென்னை தியாகராயர் நகரில் தேங்கியிருந்த மழைநீரை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நிறைய முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கூறினார்.
இதையடுத்து, ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடு குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்த நிலையில், அந்த ஆணையம் தமிழக முழுவதும் நேரடியாக சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஒப்பந்தார்கள் உள்ளிட்டோரிடம் விசாரித்தது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 200 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை டேவிதார் தாக்கல் செய்தார்
Comments