துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம்..!

0 2971
துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக் கோரி தலைமை செயலாளருக்கு ஆளுநர் கடிதம்..!

துணைவேந்தர் நியமன மசோதா குறித்து விளக்கம் அளிக்கக்கோரி தலைமைச் செயலாளருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இருந்து வரும் நிலையில், மாநில அரசே துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில் துணைவேந்தர்களை அரசே நியமிப்பது பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்துக்கு புறம்பானது என்றும் அரசியல் தலையீட்டுக்கு வழிவகுக்கிறது என்றும் தெரிவித்துள்ள ஆளுநர், இது குறித்து விளக்கம் அளிக்குமாறு கடிதம் எழுதியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments