குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

0 3312
"குடும்ப சூழ்நிலையால் ராணுவத்தில் சேர முடியவில்லை" - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

இளம்வயதில் தான் ராணுவத்தில் சேர விரும்பி அதற்கான தேர்வு கூட எழுதியதாகவும், குடும்பத்தில் ஏற்பட்ட சூழல் காரணமாக சேர முடியவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மணிப்பூரின் இம்பாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா - சீனா இடையே மோதல் நடந்த போது, நமது ராணுவ வீரர்கள் காட்டிய துணிச்சலும், தைரியமும் அன்றைய ராணுவ தளபதிக்கும் தனக்கும் தெரியும் என்றார்.

மேலும், மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றோர் ஏதோ ஒரு வகையில் தேசத்திற்கு பங்காற்றினாலும், ராணுவ வீரர்களின் பணி, சேவையை விட மேலானது என்றும் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments