உடலில் தீ வைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்த மாணவன்..! 3 பேர் உடல் கருகினர்..!
நாராயணா கல்விக்குழுமத்தின் ஜூனியர் கல்லூரியில் கல்வி கட்டணம் செலுத்தாததை காரணம் காட்டி 12 ஆம் வகுப்பு மாணவனுக்கு மாற்றுச் சான்றிதழ் மறுக்கப்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த மாணவர் உடலில் தீவைத்துக் கொண்டு கல்லூரி முதல்வரை கட்டிப்பிடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒரு மாற்றுச் சான்றிதழுக்காக மூவர் உடல் கருகி மருத்துவமனை சென்ற பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..
ஐதராபாத் அடுத்த ராமானந்தபூரில் நாராயணா கல்வி குழுமத்திற்கு சொந்தமான ஜூனியர் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகின்றது.
இந்தக் கல்லூரியில் 12 ஆம் வகுப்பு முடித்த மாணவர் நாராயணசுவாமி என்பவர் தனது மாற்றுச் சான்றிதழை கேட்டு கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியை சந்தித்தார்.
அப்போது கல்வி கட்டணம் பாக்கி இருப்பதால் முழுமையாக கல்வி கட்டணம் செலுத்தினால் தான் மாற்று சான்றிதழை தருவேன் என்று கறாராக கூறி திருப்பி அனுப்பினார்.
கல்விக்கட்டணம் செலுத்த இயலாத நிலையில் கையில் பெட்ரோலுடன், கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியின் அறைக்கு சென்றார் மாணவர் நாராயணசுவாமி.
தன் மீது பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்ட மாணவர், ஓடிச்சென்று கல்லூரி முதல்வர் சுதாகர் ரெட்டியை கட்டிப்பிடித்துக் கொண்டார்
கல்லூரி முதல்வரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ஆசிரியர்கள், இருவர் மீதும் கொளுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
முதல்வர் சுதாகர் ரெட்டியின் மேல் சட்டை முழுவதும் தீயில் எரிந்து கருகி விட்டதால் வெந்தபுண்ணுடன் சிகிச்சைக்காக ஆட்டோவில் ஏறி செல்ல புறப்பட்டார்
இதில் காப்பாற்ற சென்ற ஆசிரியர் ஒருவருடன் சேர்த்து 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இவ்வளவு களேபாரங்களையும் நிகழ்த்திய மாணவன் தனது கையில் செல்போனை வைத்துக் கொண்டு உறவினர்களுக்கு தகவல் அளித்துக் கொண்டிருந்தான். அவனது முன்னால் ஸ்டெச்சரில் கருகிய நிலையில் கல்லூரி முதல்வர் படுத்திருந்தார்.
தனது டிசியை ஒழுங்காக கொடுத்திருந்தால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது என்று மாணவர் நாராயணசாமி, போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் மீது வழக்கு பதிவு செய்து ராமானந்தபூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments