நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதால் மக்களை வெளியேற்ற நடவடிக்கை
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 100 மீட்டர் உயரம் கொண்ட சூப்பர் டெக் இரட்டை கோபுர கட்டிடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட உள்ளதால், பாதுகாப்பு கருதி அருகில் வசிக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட உள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவிற்கு இணங்க, வருகிற 28 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு 3500 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருள்களை பயன்படுத்தி இரு கட்டிடங்களும் தகர்க்கப்பட உள்ளன.
அன்றைய தினம் காலை 7.30 மணிக்கு வீடுகளை விட்டு வெளியேறி விட்டு மாலை 4 மணி அளவில் தான் திரும்ப வேண்டும் என அப்பகுதி மக்களை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். அவர்களது வாகனங்களையும் அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
Comments