தரைப்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் போதிய தடுப்பு வசதிகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார்
சிவகங்கை மாவட்டம் பனையூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தரைப்பாலம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் மரண குழிகளாக காட்சியளிப்பதாகவும், போதிய விழிப்புணர்வு தடுப்புகள் இல்லாததால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சிவகங்கை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைக்க பெரியளவில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன இந்நிலையில், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் சென்ற திருப்பாச்சேத்தியை சேர்ந்த கொத்தனார் சேதுராமன், அந்த பள்ளத்தில் வழித்தவறி விழுந்து உயிரிழந்தார்.
Comments