"இந்தியாவிலேயே அதிகம் கடன் பெறும் மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது" - அண்ணாமலை
இந்தியாவிலேயே அதிகம் கடன் பெறக்கூடிய மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, மகாராஷ்டிரா சட்டமன்ற உறுப்பினர் கேப்டன் தமிழ்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொட்டு மழையில், பிரம்மாண்டமாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருவதாக விமர்சித்தார். தான் படித்ததற்கு திமுக தான் காரணம் என்கிறார்கள் அது உண்மையல்ல என்றும், ஆனால் தான் அரசியலுக்கு வந்ததற்கு திமுக தான் காரணம் என்றார்.
தொடர்ந்து பேசிய அண்ணாமலை, திராவிட மாடல் என்று சொல்லும் திமுக ஆட்சியில் பட்டியலினத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தேசியக் கொடியை ஏற்ற முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்தார்.
Comments