அரும்பாக்கம் தனியார் வங்கியில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு: முருகன் உள்பட 3 பேர் புழல் சிறையில் அடைப்பு

0 3665

சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதுசெய்யப்பட்ட முக்கிய குற்றவாளி முருகன் உள்பட 3 பேர் நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில் 31.7 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான முருகன் அவரது கூட்டாளிகளான சூர்யா மற்றும் செந்தில் ஆகியோர் நேற்று இரவு 10 மணியளவில் எழும்பூர் குற்றவியல் நடுவர் முன் அவரது இல்லத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

3 பேரையும் செப்டம்பர் 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments