டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் - உயர்நீதிமன்றம்
டாஸ்மாக் பார் உரிமம் வழங்குவது தொடர்பான டெண்டர் நடைமுறையைத் தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடை அருகில் தின்பண்டங்களை விற்பனை செய்வது மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கான பார்களை நடத்தும் உரிமங்களுக்கான டெண்டருக்கு விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்த 2-ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது.
இதற்கு தடை கோரி பார் உரிமையாளர்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், டெண்டர் நடைமுறையை தொடரலாம் என்றும், அதனை இறுதி செய்து யாருக்கும் டெண்டர் வழங்கக் கூடாது என்றும் கூறியதுடன், இந்த மனுவுக்கு டாஸ்மாக் நிர்வாகம் வரும் 26-ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
Comments