தேசியப் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் - அமைச்சர் அமித்ஷா

0 2629

தேசியப் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.

தேசிய பாதுகாப்புக்கான உத்திகள் குறித்த இரண்டுநாள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் தீவிரவாதத்தை எதிர்கொள்ளுதல், மாவோயிஸ்ட் பிரச்சனை, கிரிப்டோகரன்சி, டிரோன்களை வீழ்த்தும் தொழில்நுட்பம், இணையக் குற்றங்கள், சமூகவலைதளக் கண்காணிப்பு, எல்லைப் பகுதி கண்காணிப்பு உள்ளிட்ட பிரச்சனை குறித்து 11 அமர்வுகளாக விதிக்கப்பட்டது.

மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2014-ஆம் ஆண்டு பிரதமர் மோடி பதவியேற்றது முதல் உள்நாட்டுப் பாதுகாப்பு மட்டுமின்றி, அனைத்துத் பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் வழிமுறைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதம், வடகிழக்கு தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் ஆகியவற்றை ஒழிப்பதில் மத்திய அரசு பெரும் வெற்றியை பெற்றுள்ளதாக அமித்ஷா சுட்டிக் காட்டினார்.

போதை பொருள்களைப் பிடிப்பது மட்டுமின்றி, போதைப்பொருள் கடத்தல் கும்பலை அடிவேர் வரை முற்றிலுமாக அகற்றுவது மிகவும் முக்கியம் என்றார்.

அண்டை நாடுகளுடனான நமது எல்லைப்பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் மக்கள் தொகை மாற்றங்கள் நடைபெறுவதால், அது குறித்த தகவல்களைச் சேகரிப்பது மாநில காவல்துறை தலைவர்களின் பொறுப்பு என்றார்.

பல்வேறு வகையான குற்றங்கள் குறித்த தரவுத்தளத்தை மத்திய அரசு தயாரித்து வருவதாகவும், அறிவியல் அணுகுமுறையுடன், பணிகள் நடைபெறுவதாகவும் அமித்ஷா தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments