ஜம்மு காஷ்மீரில் சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைய வாய்ப்பு - ஹிர்தேஷ் குமார்
ஜம்மு-காஷ்மீரில், சுமார் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளதாக, ஜம்மு-காஷ்மீர் தலைமை தேர்தல் ஆணையர் ஹிர்தேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டிற்கு பின், சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சிறப்பு வாக்காளர் திருத்தம் வரும் நவம்பர் 25-ம் தேதி முடிவடையும் நிலையில், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
வரும் செப்டம்பர் 15-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதோடு, வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 25 வரை ஆட்சேபனைகள் தெரிவிக்க காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் வெளிமாநிலத்தவரும் வாக்காளராக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments