மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பவுடர் வடிவிலான தங்கம் கடத்தல்.. விமான நிலைய ஊழியர் கைது..!

0 3290
மலேசியாவில் இருந்து வந்த விமானத்தில் ரூ.90 லட்சம் மதிப்பிலான பவுடர் வடிவிலான தங்கம் கடத்தல்.. விமான நிலைய ஊழியர் கைது..!

திருச்சி விமான நிலையத்தில் பவுடர் வடிவத்திலான 90 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கடத்துவதற்கு துணை போனதாக விமான நிலைய ஊழியர் கைது செய்யப்பட்டார்.

கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த புதுக்கோட்டையை சேர்ந்த பயணி ஒருவர், விமான நிலைய ஊழியரான யுவராஜிடம் விமானத்தில் வைத்துள்ள பார்சலை வெளியே கொண்டு வந்து உதவுமாறு கேட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அந்த பார்சலில் இருந்த பவுடர் வடிவில் ஆன தங்கத்தை யுவராஜ், தனது சாக்ஸ் மற்றும் காலணியில் மறைத்து வைத்து வெளியே எடுத்து வர முயற்சித்துள்ளார்.

அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் சுங்கத்துறையினர் யுவராஜை சோதனை செய்ததில், தங்கத்தை மறைத்து வைத்து கடத்தலுக்கு துணை போனது தெரிய வந்தது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments