5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்றது ஏர்டெல்
கட்டணம் செலுத்திய சில மணி நேரங்களில் 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக் கடிதம் அரசிடம் இருந்து கிடைத்துள்ளதாகவும், தொழில் செய்வது எளிதாகியுள்ளதாகவும் பார்தி ஏர்டெல் நிறுவனத் தலைவர் சுனில் மிட்டல் தெரிவித்துள்ளார்.
5ஜி சேவையை வழங்க உள்ள நிறுவனங்களிடம் அதற்கான கட்டணத்தை 20 ஆண்டுத் தவணைகளாகச் செலுத்தலாம் எனத் தொலைத்தொடர்புத் துறை கேட்டுக்கொண்டது.
இந்நிலையில் 43 ஆயிரத்து 40 கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ள பார்தி ஏர்டெல் நிறுவனம் நேற்று 4 ஆண்டுகளுக்கான தவணை 8312 கோடி ரூபாயை ஒரே முறையில் செலுத்தியது.
Comments