சென்னை வானகரத்தில் தனியார் எண்ணெய் குடோனில் பயங்கர தீ விபத்து
சென்னை வானகரம் பகுதியில் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்து ஏற்பட்டதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
வானகரம் சர்வீஸ் சாலை பகுதியில் மிஸ்டர் கோல்டு எண்ணெய் கிடங்கு அருகிலேயே பிளைவுட் கிடங்கு, டைல்ஸ் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்குகள் உள்ளன.
நேற்றிரவு எண்ணெய் கிடங்கில் திடீரென பற்றிய தீ, அருகில் இருந்த 2 பிளைவுட் பர்னிச்சர் கிடங்கு மற்றும் 6 டைல்ஸ் கிடங்கு ஆகியவற்றிற்கும் தீ பரவியது. அங்கிருந்த 3 எண்ணெய் டேங்கர் லாரிகளிலும் தீப்பிடித்து எரிந்தது.
10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீர ர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments